“இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுதேவாவை நாயகனாக கொண்டு இயக்கியுள்ள படத்திற்கு “பஹிரா” என தலைப்பிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் தலைப்பு பற்றி கூறும்போது…
இத்தலைப்பு பிரபல காமிக் கதையில் வரும் கதாப்பாத்திரத்தின் பெயர் ஆகும். “தி ஜங்கிள் புக்” காமிக் கதையில் வரும் ஒரு கருஞ்சிறுத்தையின் பெயர் தான் பஹிரா. அந்தக்கதையில் வரும் நாயகன் பாத்திரமான மோக்ளியை பாடுபட்டு காப்பாற்றும் கருஞ்சிறுத்தையின் பெயர் தான் பஹிரா. இப்படத்தில் பிரபுதேவா சாரின் கதாப்பாத்திரம் இந்த குணநலன்களை கொண்டதாக இருக்கும்.
பாதுகாப்பு அரணாக, காப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கதாப்பாத்திரம் அவருடையது, அதனால் தான் இந்தப்பெயரை வைத்தோம். இத்தருணத்தில் நடிகர் தனுஷுற்கு எங்கள் படத்தின் தலைப்பை பெருமையுடன் வெளியிட்டதற்கு பெரும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். “பஹிரா” படம் சைக்கோ திரில்லர் கலந்த மர்ம வகை படமாகும். அதனுள் பல ஆச்சர்யங்களும் பல திருப்பங்களும் இருக்கும்” என்றார்