Tamil Movie Ads News and Videos Portal

பிரபுதேவாவின் “காதலன் ரிட்டன்ஸ்”

பிரபுதேவா, நக்மா, எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி வெற்றிப்பெற்ற திரைப்படம் “காதலன்”. இப்படத்தின் தலைப்பை பயன்படுத்தி ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மற்றும் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது “காதலன் ரிட்டன்ஸ்” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்றும், இதனை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியாகியுள்ளது