Tamil Movie Ads News and Videos Portal

பிரபுதேவா காதலன் அல்ல; “சைக்கோ”

ஆரம்பத்தில் தனது திரை வாழ்க்கையை ஒரு நடனம் ஆடும் துணை நடிகராக தொடங்கி, பின்னர் நடன இயக்குநராகவும் நடிகராகவும் வளர்ந்து இன்று இயக்குநர் என்னும் உயரத்தை தொட்டிருப்பவர் பிரபுதேவா. இவர் 1994ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘காதலன்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இதில் நக்மா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இப்படத்தின் இரண்டாம் பாகமாக அவரது நடிப்பில் காதலன் இரண்டாம் பாகம் அதே பெயரில் உருவாகி வருவதாகவும் அதை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தினை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அப்படம் காதலன் படத்தின் தொடர்ச்சி இல்லை என்றும், அதில் பிரபுதேவா காதலன் வேடத்தில் நடிக்கவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது. ’பஹிரா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இப்படத்தில் பிரபுதேவா சைக்கோவா நடிக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.