Tamil Movie Ads News and Videos Portal

பிரபாஸை நம்பி அகலக்கால் வைக்கிறார்களா..??

பாகுபலி படத்தின் வெற்றி பிரபாஸை இந்திய பிரபலமாகவே மாற்றிவிட்டது. மேலும் அடுத்ததாக பிரபாஸ் நடித்த சாஹோ படமும் இந்தியாவில் 100 கோடி வசூல் சாதனை புரிந்ததால், அவரை நம்பி எவ்வளவு பணமும் கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராகிவிட்டனர். தற்போது ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படத்திற்கு தற்காலிகப் பெயராக “ஓ டியர்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் 8 நாட்கள் 150 துணை நடிகர்களுடன் நடத்தப்பட்டது.

இந்த 8 நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது ஒரே ஒரு ஷாட் மட்டும் தானாம். இதற்கு அவர்கள் செலவழித்திருக்கும் தொகை மட்டும் 2 கோடி என்கிறார்கள். இதனையறிந்த டோலிவுட் வட்டாரம் இவ்வளவு செலவு அவசியம் தானா..? என்று வாயைப் பிளக்கிறது. மேலும் பிரபாஸின் முந்தைய படங்களின் வெற்றியைக் கணக்கிட்டு இப்படத்தில் அகலக்கால் வைக்கிறார்களோ என்கின்ற கேள்வியும் டோலிவுட்டில் எழுந்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகவுள்ளது.