‘பாகுபலி’ திரைப்படத்திற்கு முன்பு வரை பிரபாஸ் பிற மொழி ரசிகர்களால் கூட அறியப்படாத ஒரு நடிகராகத்தான் இருந்தார். ஆனால் பாகுபலி படத்தின் வெற்றி அவரை இந்திய அளவில் அடையாளப்படுத்திவிட்ட்து. இதனால் அவர் நடித்த ‘சாஹோ’ திரைப்படம் இந்தியில் 70 கோடிக்கு விற்பனையானது. தற்போது அவரின் 20வது படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கி வருகிறார்.
இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஹிந்தி விற்பனை தற்போது 80 கோடியினை எட்டியிருக்கிறதாம். தென்னிந்திய நடிகர் ஒருவருக்கு ஹிந்தியில் இப்படி ஒரு மார்க்கெட் என்பது முக்கிய பிற ஸ்டார்களான ரஜினி, கமல், மம்முட்டி, சிரஞ்சீவி, அஜீத், விஜய், துல்கர், பகத்பாசில், தனுஷ், சூர்யா ஆகியோரால் கூட எட்ட முடியாத உயரம் என்பதால் பாலிவுட்டே பிரபாஸைப் பார்த்து ஆச்சரியப்படுகிறதாம்.