Tamil Movie Ads News and Videos Portal

10 லட்சம் பார்வையாளர்களை கடந்தது பவுடர் பட பாடல்!

தாதா87 வெற்றிப்பட இயக்குநர் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் பவுடர் திரைப்படத்தின் பாடல் நோ சூடு நோ சொரணை. இயக்குநர் விஜய் ஸ்ரீஜி பாடல் வரிகளை எழுதகானா பாலா பாடியுள்ளார். விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகி இணையதளத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றுள்ள இந்த பாடலை யூடியூபில் 10 லட்சம் பார்வையாளர்கள் மேல் கண்டு ரசித்துள்ளனர். விரைவில் பவுடர் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடக்கவுள்ளது.

#பவுடர் #Powder