Tamil Movie Ads News and Videos Portal

ஷங்கர் வெளியிட்டது வாழ்த்தா..?? பட போஸ்டரா..?

- Advertisement -

1998ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 22 ஆண்டுகள் இடைவெளியில் தற்போது உருவாகி வருகிறது. இதில் வயதான சேனாதிபதி கதாபாத்திரத்தில் கமல்ஹாசனே நடிக்கிறார். அவரின் மனைவியாக சுகன்யா நடித்த 85 வயது அமிர்தவள்ளி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், விவேக் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடையில் கமல்ஹாசனின்

மருத்துவ சிகிச்சையினால் தடைபட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் இந்த புத்தாண்டின் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் கமலின் புகைப்படத்துடன் இருக்கும் இந்தியன் 2 என அச்சிடப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு கமலுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியிருக்கிறார். அதில் “Older, Wiser, Deadlier” என்ற வாசகங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது கமல்ஹாசனுக்கு ஷங்கர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியா..? அல்லது இந்தியன் 2 படத்தின் போஸ்டரா..? என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.