Tamil Movie Ads News and Videos Portal

போர் தொழில்! த் இல்ல..But கெத்து இருக்கு!

தமிழ்த்திரைப் படங்களின் பிரஸ்மீட் வரலாற்றைத் தோண்டித் துருவினால் படத்தில் பங்காற்றியவர்கள் ஒருவர் பற்றி ஒருவர் அவரைப் பற்றி இவர் என புகழ்ந்து புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் போர்தொழில் படத்தின் பிரஸ்மீட்டில் எல்லோரும் ஒருவரைப் பற்றி மட்டுமே பேசினார்கள். அந்த ஒருவர் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜன். மிகத்தெளிவான திரைமொழியை இப்படத்தில் பயன்படுத்தியிருப்பதாக படத்தின் ஹீரோக்கள் சரத்குமார் அசோக்செல்வன் முதல் அனைவரும் இயக்குநரைப் புகழ்ந்து பேசினார்கள். இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் விக்னேஷ் ராஜன் பேசும்போது என்னை யாராவது விமர்சனம் செய்தால் கூட முகத்திற்கு நேராக எதிர்கொள்ளலாம். ஆனால் நிறையப் பாராட்டுக்களை எப்படி எதிர்கொள்வது என தெரியவில்லை என்றார். மேலும் இன்று இப்படத்தின் டீசர் போன்ற விஷுவல்களைப் பார்த்ததும் நமக்கு ஒரு விசயம் தோன்றியது. இலக்கணப்படி போர்தொழில் என்ற சொல்லில் த் வரவேண்டும். போர்த்தொழில் என்பதே சந்திப்பிழையற்ற வார்த்தை. ஆனால் போர் தொழில் என்றே டைட்டில் இருக்கிறது. இதற்கான காரணம் படத்தின் உள்ளடக்கத்தில் இருக்கும் என்கிறார்கள் சிலர். So த் இல்லை என்றாலும் படத்தில் கெத்து இருக்கும் என நம்பப்படுகிறது