இரு இளைஞர்களின் ஈகோ போரால் விளையும் கேங் வார் தான் ஒன்லைன்
காளிதாஸ் அர்ஜுன் தான் என இரு தாஸ்களும் பள்ளிக்கால நண்பர்கள். காளிதாஸுக்கு நடக்கும் ஒரு அதிர்ச்சிகரமான அனுபவத்திற்கு அர்ஜுன் தாஸ் சின்னதாக காரணமாகிவிடுகிறார். அதனால் காளிதாஸ் அவரை கல்லூரிப் பருவத்தில் பழி வாங்க நினைக்கிறார். அது நடந்ததா? என்பது ஒருகதை. கல்லூரி நிர்வாகத்தில் பங்கேற்று அங்கு நியாயம் கிடைக்க வேண்டும் என இருபெண்களும், ஒரு திருநங்கையும் போராடுகிறார்கள். அவர்களுக்கு எதிராக ஒரு அரசியல் வாதி பெண் இருக்கிறார். இவர்களின் ஆடுபுலி ஆட்டம் ஒரு கதை. இந்த இருகதைகள் ஒரு புள்ளியில் எப்படி இணைந்தது என்பதாக விரிகிறது படத்தின் திரைக்கதை
படத்தை தாங்கிப்பிடிப்பதில் பலருக்கும் பெரும் போரே நிகழ்ந்துள்ளது. காளிதாஸ் அர்ஜுன் தாஸ் ஆகிய ஹீரோக்களை விட, T.J.பானு, சஞ்சனா நடராஜன், அமிர்தா ஸ்ரீனிவாசன் ஆகிய ஹீரோயின்களே அதிக ஸ்கோர் செய்கிறார்கள். ஆண்களின் கேரக்டர்களை விட பெண்கள் கேரக்ட்ரேசனில் சின்னதாக ஒரு தெளிவு இருக்கிறது. அதனால் அவர்கள் நடிப்பு எடுபடுகிறது
சஞ்ஜித் ஹெக்டே, துருவ் விஷ்வநாத், கெளரவ் உள்பட படத்தின் இசையில் பெரும் டீமே உழைத்துள்ளது. நிஜமாகவே பாடல்கள் பின்னணி இசை வொர்த்து. க்ளைமாக்ஸ் அருகே, ‘பூங்காற்று சதிராடுது” என்ற இளையராஜா பாடலைச் சேர்த்து விதம் அல்டிமேட் ஐடியா. ஜிம்ஷி காலித், ப்ரேஸ்லி ஆகியோரின் ஒளிப்பதிவு உலகத்தரம். அர்ஜுன் தாஸ் போடும் ஒரு வாலிபால் கிரவுண்ட் சண்டை அட்டகாசமாக வொர்க்கவுட் ஆகியுள்ளது
எடிட்டர் படத்தை இன்னும் எடிட் செய்திருக்கணும்
2K கிட்ஸை குறிவைத்த இயக்குநர் பிஜாய் நம்பியார் படத்தை எடுப்பதற்கு போட்ட எபெக்டில் எழுதுவதற்கும் போட்டிருக்கணும். கதை திரைக்கதையாக படம் படு வீக். இருந்தும் நல்ல ஒரு ஆக்ஷன் ட்ரீட் வேணும், தற்போதைய கல்லூரி காலத்தை கண்முன் பார்க்கணும் என்று விரும்பும் நபராக நீங்களிருந்தால் போர்-க்கு கிளம்பலாம்
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்