காமெடியே இலக்கு என களமிறங்கியுள்ளார் இந்த பூமர் அங்கிள்.. But காமெடி வந்ததா?
ரஷ்யப்பெண்ணை மணந்த யோகிபாபு அப்பெண்ணிடம் விவாகரத்து கோருகிறார். அந்தப் பெண்ணோ சில நிபந்தனைகளை விதிக்கிறார். அந்த நிபந்தனைகள் என்னவென்றால் யோகிபாபுவிற்கு சொந்தமான ஒரு அரண்மனை இருக்கிறது அங்கு தங்கவேண்டும் என்பது தான். அப்படி அந்த அரண்மனைக்குள் என்ன இருக்கிறது? என்பதும், இந்த பூமர் அங்கிள் நிஜமாக யார்? என்பதுமே கதையாக பயணிக்கிறது
/சாதா தோசையை ஸ்பெசலாக மாற்றினால் தான் அது ஸ்பெசல் சாதா. இல்லன்னா அது வெறும் சாதா/ எதுக்கு இந்தப் பன்ச்? இப்படி படிக்கும் போது கடுப்பாகும் பல பன்ச்களை யோகியார் பேசுகிறார். சில இடங்களில் ரசிக்கவும் வைக்கிறார். அடுத்து மறைந்த ஷேசு எதோ காமெடி செய்ய முயற்சித்துள்ளார். ரோபோ சங்கர் முதல் இதர நடிகர்கள் எல்லாம் ஜஸ்ட் பாஸ்
பின்னணி இசை பாடல்கள் ஓரளவுக்கு படத்திற்கு கை கொடுக்கின்றன. ஒளிப்பதிவு ஓகே ரகம்
எல்லா சூப்பர் ஹீரோக்களையும் படைத்தவர் ஒரு இந்தியர். மேலும் தற்போது அங்கிளாக மாறியுள்ள ஒரு சூப்பர் ஹீரோவும் ஒரு இந்தியர். So இந்த சூப்பர் ஹீரோக்களை உருவாக்கும் பவரை கண்டுபுடித்து, அதை ரஷ்யாவிற்கு தள்ளிட்டுப் போவதற்கே யோகிபாபுவை ரஷ்யப்பெண் மணந்துள்ளார். அட அட..கதை கேட்க செம்ம ஆர்வத்தை தருகிறதல்லவா? ஆனால் திரைக்கதையில் அப்படியே உல்டா. உருவக கேலி முதல் பின் நவீனத்துவ திரைக்கதை என நிகழ்காலத்துக்குள் அடங்காத ஒரு பழைய பார்மட் ஸ்டோரி டெல்லிங். சில இடங்களில் பூமர் அங்கிள் என்று திரைக்கதையைத் தான் சொல்ல தோன்றுகிறது
பூமர் அங்கிள்- ஸாரி அங்கிள்
2/5
-மு.ஜெகன் கவிராஜ்