பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து காடுகள் மற்றும் ஹைதராபாத் ராமோஜிராவ் ப்லிம் சிட்டியில் உள்ள திரைப்பட நகரம் போன்ற இடங்களில் வேகமாக வளர்ந்து வருகிறது. அமிதாப்பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயரம் ரவி, அஷ்வின், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, கீர்த்தி சுரேஷ், ஜெயராம், பிரபு, சரத்குமார், பார்த்திபன் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இதில் கதைப்படி ஜெயம்ரவி அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இவருக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார் என்றும் கருதப்பட்டு வந்தது. தற்போது இப்படத்தில் மற்றொரு பாலிவுட் நடிகையான சோபிதா துலிப்பலா இணைந்திருக்கிறார். இவர் 2013ல் அனுராக் காஷ்யப் இயக்கிய ராமன் ராகவ் படத்திலும் சென்ற ஆண்டு மலையாளத்தில் வெளியான “மூப்பன்” மற்றும் ‘மேட் இன் ஹெவன்” வெஃப் சீரிஸ் போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தான் தற்போது ஜெயம் ரவியின் ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.