2020-ல் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரீலீஷ்..!!??
தமிழ் இலக்கிய உலகின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான கல்கி எழுதிய வரலாற்றுப் புதினம் “பொன்னியின் செல்வன்” இதனை படமாக்கும் முயற்சி எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே இருந்து வந்தாலும் தற்போது இயக்குநர் மணிரத்னம் அந்த முயற்சியை படப்பிடிப்புத்தளம் வரை எடுத்துச் சென்றிருக்கிறார். அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, பார்த்திபன், லால் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். சுமார் 800 கோடி பட்ஜெட்டில் கடந்த டிசம்பர் 12ம் தேதி அன்று, தாய்லாந்து காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இரண்டு பாகங்களாக தயாராகவிருக்கும் இப்படத்தின் முதல் பாகத்தை 2020ம் ஆண்டில் வெளியிடும் முனைப்போடு படக்குழு மும்மரமாக உழைத்து வருகிறதாம். இதற்காக போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளான எடிட்டிங், டப்பிங், ரீ-ரெக்கார்டிங் போன்ற பணிகளை கவனிக்கவென்றே தனிக்குழுவை அமைத்து வேலை வாங்கிக் கொண்டிருக்கிறாராம் இயக்குநர் மணிரத்னம்.