நிகழ்கால இலக்கியங்களில் சிறுவர்களுக்கான இலக்கியம் குறைந்து வரும் நேரங்களில் சிறுவர்களுக்கான படங்கள் வருவது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டு பிழை படக்குழுவினருக்கு முதல் வாழ்த்துகள்.
இந்தப்படத்தை விமர்சனமாக அணுகினால் நிறைய பிழைகளை அடுக்க முடியும். அதனால் இப்படம் சொல்ல வரும் விசயத்தை மட்டும் உள் வாங்கிக்கொள்ளலாம்
படித்தால் உயரலாம் என்பது இன்றைய வாழ்வின் நிதர்சனம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் படிக்காமல் விட்டால் நாம் எதிர்கொள்ள வேண்டிய இருக்கும் சிரமங்கள் நிறைய. ஏன் என்றால் இனி இது நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் பக்கா டிஜிட்டல் இந்தியா தான். அந்த டிஜிட்டம் உலகில் தாக்குப்பிடிக்க நிச்சயம் கல்வி கட்டாயம். படத்தில் ஒரு பிரதான கதாபாத்திரம் படிக்காமல் ஊர்விட்டு ஊர் போய் பெரிய பணக்காரனாக திரும்பி வரும். அந்தக் கேரக்டரைக் கண்டு மூன்று சிறுவர்கள் இன்ஸ்பையர் ஆகி வெளியூர் சென்று வதை படுகிறார்கள். படத்தில் இதை மிக முக்கியமான ஒன்றாக கருத வேண்டியுள்ளது. ஒரே பாட்டில் பணக்காரன் என்பது போன்ற மாயத்தை சிறுவர்கள் நம்ப வேண்டாம் என்கிறது பிழை.
மேலும் பெற்றவர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என்பதை பழைய பாணியிலே சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா. அவர் சொல்லி இருக்கும் விதம் முக்கியமல்ல..சொன்ன விசயமே முக்கியம் என்பதால் பிழை பிழையாக தெரியவில்லை. இப்படியான படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் இருக்கும் கஷ்டத்தை உணர்ந்தும் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்றெண்ணம் கொண்ட தயாரிப்பாளர் தாமோதரன் அவர்களுக்கு ஏராளமான பாராட்டுக்கள்
-மு.ஜெகன்சேட்