Tamil Movie Ads News and Videos Portal

பிணத்தை எரித்தே வெளிச்சம்-ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

தலித் இலக்கியம் என்ற சொல்லாட்சி அதிக கவனம் பெற்றதே அம்பேத்கரின் 100-ஆம் ஆண்டு விழாவிற்கு பின்பு தான். புராண இதிகாசங்கள் மூலமாக முன்னிலைப்படுத்தப் படும் சாதியபாகுபாடு நமது பண்பாடு தான் என்று பொய்யாக உறுதி செய்கிறது. Then இது ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது என்பதை அழுத்திச் சொல்வதன் மூலமாகவும் தீண்டாமையை ஊக்குவிக்கும் போக்கு வளர்கிறது என்கிறது நூலில் உள்ள ஒரு கட்டுரை.

மராத்தி, குஜராத்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் தலித் இலக்கியத்தின் வளர்ச்சி வீச்சு ஆகியவற்றை அலசி தொகுத்திருக்கும் இந்திரன், தலித் அல்லாதோர் தலித் இலக்கியம் படைத்திருப்பதையும் Note செய்திருக்கிறார். வெறும் எழுத்தில் கொண்டு வரப்படும் உணர்ச்சியை வாழ்வில் கொட்டுகிறோமா என்ற கேள்விக்கு, “எழுத்தை வாழ்வாக்கும் வல்லமையை அவ்வெழுத்து கட்டியெழுப்ப வேண்டும் என்று மறைமுகமாக உணர்த்துகிறது நூல்.

பெளத்த மதத்தின் எதிர்ப்புணர்ச்சியே சாதியபாகுபாடு என்பதை வரையறுக்க முக்கிய காரணம் என்பதை அயோத்திதாசரின் எழுத்துக்களை முன்வைத்துச் சொல்கிறார் இந்திரன். சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ளோம் என்பதை ஒடுக்கப்பட்டோரும், பாவம் ஒடுக்கப்பட்டார்கள் என்று ஒடுக்கப்படாதோரும் திரும்ப திரும்பச் சொல்லும் போது.. அதுவொரு போதையாகிறது. அந்தப் போதையை மிக லாவகமாக ஏற்றி வைத்திருக்கிறார்கள் என்பதை அயோத்திதாசரின் மொழிவழியாக உணர முடிகிறது

ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு மாற்றுப்பார்வை உண்டு. அதை ஏற்றுக்கொண்டு பார்க்கும் போது நம் பார்வை விசாலமாக இருக்கும். இலக்கியம் ஒரு பிரிவை தனிமைப்படுத்துகிறது என்றால் அதை இலக்கியம் வழி நின்றே அடிக்க வேண்டும். அப்படிப் பார்க்கும் போது தலித் இலக்கியம் தனித்த இலக்கியமாக வளர்வது அவசியம் ஆரோக்கியம்!