Tamil Movie Ads News and Videos Portal

மதுரையில் நடைபெற்றது ‘பேட்டைக்காளி’ வெளியீட்டு விழா!

ஆஹாவின் பிரம்மாண்ட படைப்பான ‘பேட்டைக்காளி’ வெளியீட்டு விழா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் ஐடா ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடந்தது. இதன் ட்ரைய்லர் காட்சிகள் வலுவான உள்ளடக்கம் மற்றும் நடிகர்களின் திறமையான நடிப்பை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதன் டைட்டில் பாடல் பார்வையாளர்கள் மத்தியில் ஹைலைட்டாக அமைந்தது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் ‘பேட்டைக்காளி’யின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும், ‘பேட்டைக்காளி’யின் உலகத்திற்குள்ளே பார்வையாளர்களை அழைத்து செல்லும் விதமாக ஃப்ர்ஸ்ட் க்ளிம்ப்ஸ்ஸூம் அங்கு திரையிடப்பட்டது.

‘பேட்டைக்காளி’ ஆஹா தமிழில் இந்த மாதம், அதாவது அக்டோபர் 21ம் தேதியில் அதன் முதல் எபிசோட் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு எபிசோட் வெளியாக உள்ளது. இனிவரும் வாரங்களில் வெளியாகும் எபிசோட்கள் அனைத்தும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு பிடித்ததாக அமையும்.

’பேட்டைக்காளி’ ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் வெப் சீரிஸ் ஆகும். ‘பேட்டைக்காளி’ உலகம் காளைகளை அடக்குபவர்களுக்கும் வளர்ப்பவர்களுக்கும் இடையே உள்ள பெருமை, வீரம், விளையாட்டுத் திறன் மற்றும் வரலாற்றுப் பிரிவு போன்றவற்றை காட்சிப்படுத்துகிறது. வளர்ப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பும், அடக்குபவர்களின் ஆக்கிரமிப்பும் முக்கிய உணர்ச்சிகளாக ’பேட்டைக்காளி’யில் இருப்பதால், ஜல்லிக்கட்டு விளையாட்டுக் குறித்தான அனுபவத்தை நிச்சயம் பார்வையாளர்களுத் தரும். நடிகர்கள் கலையரசன், கிஷோர், வேலன் ராமமூர்த்தி, ஷீலா மற்றும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ அந்தோணி ஆகியோரின் திறமையான நடிப்பு முன்னோட்டக் காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. La. ராஜ்குமார் இயக்க, தேசிய விருது பெற்ற இயக்குநரான வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.

#PettaiKaali #பேட்டைக்காளி