டீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில் வெளியான குறும்படம் “பெண் உறுப்பு”. அருண் மிஜோ எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கே.ஆர்.வினோத் நடித்திருந்தார்.
பெண்களுக்கான சமூக கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த குறும் படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்த படம் ஒரு விழிப்புணர்வாக கருதப்படுகிறது.தற்போது இந்த குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பார்வையை அறம் பட இயக்குனர் கோபி நாயனார் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.