Tamil Movie Ads News and Videos Portal

ஜோதிகாவைத் தொடர்ந்து அமேசானில் மிரட்ட வரும் அடுத்த குயின்

- Advertisement -


கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்க கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், ஜெயராம் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் அறிமுக இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தேசிய திரைப்பட விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட டிரைலரை இந்திய சினிமா உலகின் சாதனையாளர்கள் மோகன்லால், தனுஷ் மற்றும் நானி வெளியிட்டனர்.

அமேசான் பிரைம் வீடியோவில் ஜுன் 19 அன்று பிரத்யேக உலக பிரிமீயருக்காக தமிழ், தெலுங்கில் நேரடியாகவும் மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவருகிறது.

அமேசான் பிரைம் வீடியோ உலக அளவில் ஐந்து மொழிகளில் வெளியிடும் 7 படங்களின் வரிசையில் மூன்றாவதாக வெளியாக உள்ள படம் பெண்குயின்.

திகில் திரைப்படமான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார். அவர் தனது கடந்த காலத்திலிருந்து ஒரு மர்மத்தை அவிழ்த்து தனது அன்புக்கு உரியவர்களைக் காப்பாற்ற ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் இப்படத்தை உலக அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்க்கலாம்.

படம் பற்றி கீர்த்தி சுரேஷ் கூறுகையில்,

“பெண்குயின் படம் நான் பணியாற்றிய படங்களில் மிகவும் சுவாரசியமான சிறந்த படமாக இருக்கும். ‘ரிதம்’, ஒரு தாயாக, மென்மையானவளாக, அக்கறை உள்ளவளாக, ஆனால், துணிச்சலான பெண்மணி. அவள் குழப்பமானவள், ஆனால் உறுதியானவள். இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவரும்.

கதைக்கு உயிர் கொடுக்கும் இயக்குனரான ஈஸ்வர் கார்த்திக்குடன் பணியாற்றியது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. உலகெங்கிலும் பார்வையாளர்களால் பாராட்டப்படும் ஒரு படத்தை தமிழ், தெலுங்கில் பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கும்.

உலக அளவில் வளர்ந்து வரும் பிரைம் வீடியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என ஸ்டோன் பென்ச் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறுகிறார்.

ஸ்டோன் பென்ச் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “நாங்கள் டிஜிட்டல் தளங்களுடன் பணிபுரிவது புதிதல்ல என்றாலும், பிரைம் வீடியோ போன்ற உலகளாவிய கூட்டாளருடன் இது போன்ற முக்கிய படத்தில் பணியாற்றுவது அருமை. ஸ்டோன் பென்ச் பிலிம்ஸில் தனித்துவமான கதைகளைச் சொல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதே நேரத்தில் தென்னிந்திய சினிமாவின் புதிய அலைகளை உருவாக்குகிறோம். புதியவர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறோம். இதன் மூலம் அற்புதமான திறமை படைத்த இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் கிடைத்திருக்கிறார். அழுத்தமான கதையை உரவாக்கியுள்ளார். திறமை படைத்த கலைஞரான கீர்த்தி சுரேஷை முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம்,” என்கிறார்.

கதைச் சுருக்கம்

மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ரிதம், தனது இரண்டாவது குழந்தையைப் பெறப் போகிறாள். அவள் ஒரு பயங்கர கனவால் அதிர்ச்சி அடைகிறாள். ஒரு குடை மனிதன் தன்னுடைய இழந்த மகனுக்கு தீங்கு விளைவிப்பதை அந்த கனவில் காண்கிறாள். கனவின் பின்னணியில் உள்ள ரகசியங்களை அவிழ்ப்பதற்கும், தனது அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பதற்கும் அவள் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு நாயுடன் சேர்ந்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறாள்.

பிரைம் வீடியோ பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் இருந்து ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் ‘பெண்குயின்’ படமும் சேர்ந்துள்ளது.

அமேசான் பிரைம் வீடியோவில் ‘பாட்டல் லோக், தி பேமிலி மேன், மிர்சாபூர், இன்சைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன்’ போன்று நான்கு அமேசான் அசல் தொடர்கள் உள்ளன.

டாம் கிளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், பிளேபாக் மற்றும் தி மார்வெலஸ் திருமதி மைசெல் உள்ளிட்ட எஸ் 1 மற்றும் எஸ் 2 விருது பெற்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் அசல் தொடர்கள் அனைத்தும் பிரைம் வீடியோவில் அமேசான் விரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் செலவு இல்லாமல் கிடைக்கிறது. இந்த சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளில் கிடைக்கும் தலைப்புகளும் உள்ளன.

பிரைம் உறுப்பினர்கள் ஸ்மார்ட் டிவிக்கள், மொபைல் சாதனங்கள், பயர் டிவி, பயர் டிவி டிஸ்க், பயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கான பிரைம் வீடியோ பயன்பாட்டில் எங்கும் எந்த நேரத்திலும் ‘பெண்குயின்’ பார்க்க முடியும்.

பிரைம் வீடியோ பயன்பாட்டில் பிரைம் உறுப்பினர்கள் எபிசோடுகளை பதிவிறக்கம் செய்யலாம். அவற்றின் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்டுகள் மற்றும் கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எங்கும் காணலாம்.

பிரைம் வீடியோ இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ 999 அல்லது மாதத்திற்கு ரூ 129 க்கு கிடைக்கிறது.

புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime ல் மேலும் தெரிந்து கொண்டு 30 நாள் இலவச சோதனை திட்டத்தில் சேரலாம்.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.