“பெண் விடுதலைன்னு சொல்லி யாரு புத்தகம் எழுதி இருந்தாலும் நமக்கு அதிலொரு வெறுப்புண்டு. முழுக்க முழுக்க அதில் ஒரு வாத்தியார் தொனி இருக்கும். துளியும் எதார்த்தம் இருக்காது. எழுதுறவங்க அடிமனசுல “எப்பாடா பெண்காவலனா ஆய்ட்டோம்டா” என்ற பந்தா இருப்பது எப்படியாவது தெரிஞ்சிடும். (நான் படிச்ச துளியூண்டு வரைக்கும்) பெரியார் எழுத்துல பேச்சுல (செயல்லயும்) மட்டும் அப்படியொரு தொனியும் பந்தாவும் இருக்காது. அதில் எதார்த்தம் இருக்கும். அவரைப்போலவே ஓஷோ எழுத்தும் பேச்சும்!
ஆண்பெண் சமம் என்ற பதமே அடிமைக்கான ஊற்றுன்னு சொல்றார். சமத்துவம் முக்கியமல்ல..சமவாய்ப்பே முக்கியம் என்கிறார். ஜஸ்ட் லைக் தட்டா அவர் உடைக்குற பர்னிச்சர்கள் பலவும் பதற வைக்குது உதற வைக்குது. உட்கார்ந்து யோசிச்சா…அட ஆமால்லனு உச்சி முகர வைக்குது. ஓஷோவை இன்னும் நிறைய படிக்கணும்🙏