தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் பவன் கல்யாண். அரசியலிலும் ஈடுபட்டு வரும் பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தெலுங்கில் ‘பிங்க்’ ரீமேக்கில் நடித்து வருகிறார். இதனையடுத்து தொடர்ச்சியாக படங்களில் நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம்.
தெலுங்கில் வெற்றி பெற்ற படங்களை தமிழிலும், தமிழில் வெற்றிபெற்ற படங்களை தெலுங்கிலும் ரீமேக் செய்வது என்பது தொன்று தொட்டு வரும் மரபு. அதன்படு தமிழில் வெற்றிபெற்ற ‘தெறி’ ‘வேதாளம்’ இரண்டு படங்களின் ரீமேக் உரிமையை தயாரிப்பு நிறுவனம் வாங்கி வைத்திருக்கிறதாம். இந்த இரண்டில் எந்த படத்தில் நடிப்பதற்கு பவன் கல்யாண் ஓகே சொல்லப் போகிறார் என்பது தெரியவில்லை.