அடிமுறை என்ற தமிழரின் தொன்மை வாய்ந்த வீர விளையாட்டு விசயங்களை பட்டாஸ் கமர்சியலாக தந்திருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்.
நாயகன் தனுஷுக்கு பக்கா கமர்சியல் பேக்கேஜ் படம் இது. சேப்படி திருடனாக மகன் கேரக்டரில் வெளுத்தெடுக்கிறார் என்றால், அடிமுறை தெரிந்த மாஸ்டராக அப்பா கேரக்டரில் பின்னி எடுக்கிறார்.
வில்லன் கேரக்டர் உள்பட படத்தில் தோன்றும் சின்ன கேரக்டர் வரை அனைவருமே அசத்தி இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் சிநேகா. மனிதி மாஸ் காட்டி இருக்கிறார்.
படத்தின் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் ஆகத்தரங்களில் ஒன்று. படத்தின் சாரம்சம் இந்தக்கால கட்டத்திற்கு தேவையானது என்பது அதி முக்கியம் என்பதால் இடைவேளைக்குப் பின்பு படத்தில் சின்ன தொய்வு இருந்தாலும் அதை எளிதாக மறக்க வைக்கிறது..
பட்டாஸ் பொங்கலிலும் வெடிக்கலாம்
-மு.ஜெகன்சேட்