Tamil Movie Ads News and Videos Portal

பதான்- விமர்சனம்

நாட்டுக்காக அர்ஜுன் விஜயகாந்த் ஆகியோர் செய்ததை, மாஸ் க்ளாஸ் கலந்து ஷாருக்கான் செய்தால் அதுதான் பதான்

இந்தியாவிற்காக ரா பிரிவில் உழைத்து அதனால் ஏற்பட்ட இழப்பு காரணமாக இந்தியாவிற்கு எதிராக நிற்கிறார் வில்லன் ஜான் ஆபிரகாம். நாடு நமக்கு என்ன செய்தது என்பது முக்கியமல்ல நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்? என்பதே முக்கியமென வில்லன் சதியை முறியடிக்க விளைகிறார் ஹீரோ ஷாருக்கான். காயமடைந்த ராணுவ ஜோல்ஜர்களை வைத்து அவர் நடத்தும் அதகள ஆபரேஷன்ஸ் தான் பதானின் மொத்த திரைக்கதையும்

படத்தில் ஆக்‌ஷன் கதகளி ஆடியிருக்கிறார் ஷாருக். என்னவொரு எனர்ஜி ப்ரசனஸ். ஸ்கிரீனில் அவர் வரும்போதே திரை தீப்பிடிக்கும் மொமெண்ட். வில்லனோடு கேடியாக செயல்பட்டு ஒரு கட்டத்தில் ஷாருக்கோடு ஜோடியாகும் கேரக்டர் தீபிகா படுகோனேவிற்கு. ஆடைகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து, ஆக்‌ஷனை எவ்வளவு கூட்ட முடியுமோ அவ்வளவு கூட்டியிருக்கிறார். சந்தோஷ சர்ப்ரைஸாக ஒரு சண்டைக்காட்சியில் வந்து அசத்துகிறார் சல்மான் கான். ஜான் ஆபிரகாம் வில்லன் பாத்திரத்திற்கு சாலப்பொருத்தம்

ஷாருக்கானுக்கு போட்டிருக்கும் பி.ஜி.எம் செம்ம. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவில் வெறித்தனம் காட்டி உழைத்துள்ளார் கேமராமேன். நிறைய சிஜி காட்சிகளை லைவாக காட்டி பக்காவாக மேட்ச் செய்திருக்கிறார்கள்

தீபிகா படுகோனே ஷாருக் கூட்டணி ரஷ்யா சென்று ஒரு ரத்தவித்தை கொள்ளையடிக்கும் எபிசோட் ஒன்று ஹாலிவுட் தரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. பழக்கப்பட்ட கதை ஒன்றில் பரபர திரைக்கதை அமைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

Finally பதான் All ஏரியாவையும் கவர் பண்ணி Full மீல்ஸ் தந்துள்ளார். இந்த வாரத்தை நல்லா என்சாய் பண்ணணும்னு நினைச்சா pls go to pathaan

அப்புறம்..
தீபிகாபடுகோன் காவி உடையில் க்ளாமராக வந்ததிற்கு கோபப்பட்டவர்கள், தேசத்திற்காக அவர் செய்யும் சேவைகளை பாராட்டவும் வேண்டும். So காவியை மட்டும் வெறித்துப் பார்க்காமல் கொஞ்சம் கருத்தையும் பார்ப்பீராக
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்