TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னனியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் “பரோல்”. இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் பெரும் வரவேற்பை குவித்த நிலையில் இப்படம் வரும் நவம்பர் 11 உலகமெங்கும் திரை ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. படவெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
இயக்குனர் துவாரக் ராஜா பேசியதாவது…
“இந்த படத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து எனக்கு முழு சுதந்திரம் கிடைத்தது. அவர் என்னை முழுமையாக நம்பினார். இந்த படம் ஒரு குடும்பத்தை பற்றிய கதை. குடும்பங்களில் நாம் பார்க்காத ஒரு பக்கத்தை பற்றிய கதை இது. அனைத்து நடிகர்களும் முழு அர்பணிப்புடன் நடித்து கொடுத்தனர். இந்த படத்தின் கதைக்களத்தில் ஆண்களால் ஏற்படும் பிரச்சனையை, பெண்கள் தீர்ப்பதாய் இருக்கும். இந்த படத்தில் நடித்த பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் அந்த உணர்வுகளை சிறப்பாக கடத்தியுள்ளனர். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. நன்றி.
#Parole #பரோல்