Tamil Movie Ads News and Videos Portal

பார்க்கிங்- விமர்சனம்

டக் என மனதில் ஸ்பார்க் ஆகும் ஒரு கான்செப்ட் இந்த பார்க்கிங்

சென்னையில் ஒரு உயர்தர ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஹரிஸ்கல்யாண். சென்னை குன்றத்தூரில் அரசு உயர் அதிகாரியாக பணியாற்றும் எம்.எஸ் பாஸ்கர். ஹரிஸ் கல்யாண் தன் காதல் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் எம்.எஸ் பாஸ்கர் குடியிருக்கும் வீட்டின் மேல் போர்ஷனுக்கு குடி வருகிறார். அந்த வீட்டில் ஒரு கார் நிறுத்தும் அளவிற்கே பார்க்கிங் இருக்கிறது. அந்தப் பார்க்கிங் இந்த இருவரின் உறவுக்குள் என்ன விளைவுகளே ஏற்படுத்துகிறது என்பதே கதை

அழகாக இருக்கும் ஹரிஸ் கல்யாண் மீட்டர் தெரிந்து அளவோடு நடித்துள்ளார். ஈகோ வெடித்து அவர் ப்ளாஸ்ட் ஆகும் இடங்கள் எல்லாம் தூள். எம்.எஸ் பாஸ்கர் தன் அனுபவத்தின் முன் நின்று தனது கேரக்டரை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அவரது கேரக்டர் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்துஜா கர்ப்பிணி மனைவியாக வந்து நடிப்பில் தன் நவரசங்களை காட்டி ஈர்க்கிறார். எம்.எஸ் பாஸ்கரின் பேமிலி, ஆஹா ஓடிடி சுரேஷ் உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களும் பக்காவாக நடித்துள்ளனர்

சாம் சி.எஸ் வழக்கம் போல் பின்னணி இசையில் பின்னியெடுத்துள்ளார். ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவில் நல்ல மெச்சூட் இருக்கிறது. கிடைத்த சின்ன கிரவுண்டில் தன்னால் ஆன மட்டும் ஆடியிருக்கிறார்

இரு குடித்தன வாசிகளை அறிமுகப்படுத்தி, அவர்களின் குணநலன் மனநலனை நமக்கு நெருக்கமாக்கி படிப்படியாக கதையை வளர்த்துச் சென்று நல்ல ஹைப் கொடுத்து ஒரு இண்டெர்வெல் கொடுத்த இயக்குநர் திரைக்கதையில் செம்ம வித்தயைக் கற்றிருக்கிறார். முன்பாதி படம் எமோஷ்னல்லி, கமர்சியல்லி நல்ல ஈர்ப்பைத் தந்தது. இரு கதாப்பாத்திரங்களுக்கான மோதல் உச்சத்தை எட்டும் சில இடங்கள் இரண்டாம் பாதியில் சலிப்பைத் தந்தன. ஒரு பார்க்கிங் பிரச்சனையை வைத்தும் ஒரு சினிமா பண்ணி கமர்சியலாக ஆடியன்ஸை ஈர்க்க முடியும் என்ற கான்பிடண்டுக்காகவே பார்க்கிங் ஓடும் தியேட்டருக்கு நாம் விசிட் அடிக்கலாம்
3.25/5
-மு.ஜெகன் கவிராஜ்