Tamil Movie Ads News and Videos Portal

ஆஸ்கரில் இடம்பெற்றுள்ள’பார்க்கிங்’!

செழுமையான உள்ளடக்கம் கொண்ட நல்ல கதைகள் எல்லைகளைக் கடந்து உலக அங்கீகாரத்தைப் பெறும். தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் அதன் நல்ல திரைக்கதை மூலம் இதை நிரூபித்துள்ளது. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம். இந்தப் படத்தின் திரைக்கதை தற்போது சர்வதேச அந்தஸ்தை பெற்றுள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் (ஆஸ்கர் விருதுகள்) ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் ஆய்வு நோக்கங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கிய ‘பார்க்கிங்’ படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கீழ் சுதன் சுந்தரம் மற்றும் கே.எஸ். சினிஷ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அதன் ஈர்க்கும் கதைக்களம் மற்றும் சிறந்த நடிப்பிற்காக விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.