”பெற்றோர்கள் மகனுக்கும் அறிவுரை சொல்ல வேண்டும்” – ஜி.வி.பிரகாஷ்
இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராகவும் உயர்ந்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் சமூகம் சார்ந்த பிரச்சனைகளிலும் பொறுப்பான முறையில் செயலாற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது சமூகத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகள் குறித்து அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் “பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளுக்கு மட்டும் அறிவுரைகள் வழங்கி வருகின்றனர். அதைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, தங்களது ஆண் பிள்ளைகளிடமும் பெண் பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து அறிவுரையூட்டி வளர்க்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவருக்கு நடந்த பாலியல் கொடுமையை அடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பாக அனைவரும் பேசத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.