ஐந்து படங்களோடு களமிறங்கும் பா.ரஞ்சித்
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பாளராகவும் தற்போது ஜெயித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் நல்ல வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய பெரிய தயாரிப்பு நிறுவனங்களோடு பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் ஐந்து படங்களை தயாரிக்க இருக்கின்றன. ஐந்து படங்களில் ஒரு படத்தை மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின் பாரதி இயக்குகிறார். மற்றொரு படத்தை பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.
அடுத்த மூன்று படங்களை சுரேஷ்மாரி, மோசஸ், ப்ராங்க்ளின் ஆகிய அறிமுக இயக்குகிறார்கள்.