Tamil Movie Ads News and Videos Portal

பரம்பொருள்- விமர்சனம்

சிலை என்ற பெரும்பொருள் அது எப்படி கை மாறுகிறது என்பதே பரம்பொருள்

பேரோசை கொண்ட காவல் அதிகாரி, பெரும் தேவை கொண்ட ஒரு இளைஞன். இருவர் கையிலும் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சிலை கிடைக்கிறது. அந்தச் சிலை கிடைக்கும் வரை என்ன நடந்தது? கிடைத்த பின் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் திரைக்கதை

வழமை போல் சரத்குமார் கம்பீரமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரின் கேரக்டர் வடிவத்தில் மிகச்சிறிய குழப்பம் இருந்தாலும் தனது மிகப்பெரிய நடிப்பால் அதைச் சரி செய்துவிடுகிறார். VIP படத்தில் வில்லனாக கவனம் ஈர்த்த நடிகர் …. இப்படத்தில் ஹீரோவாக நல்ல ஸ்கோரிங் செய்துள்ளார். மனதில் இருப்பது ஒன்று வெளியில் செய்வது ஒன்று என அவர் அசத்துகிறார். ஹீரோயினுக்கு பெரிய ஸ்கோப் இல்லை. வில்லன் டீம் எதிர்பார்த்த வேலைகளை சரியாகச் செய்கிறார்கள். சில நிமிடங்களே வந்தாலும் பாலாஜி சக்திவேல் அசத்தியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை திரைக்கதைக்கு அழுத்தம் சேர்த்து படத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. பாடல்களும் பராவாயில்லை. ஒளிப்பதிவில் கேமராமேன் பாண்டிகுமார் நன்றாக உழைத்துள்ளார். பெரும்பான்மை காட்சிகள் நைட் எபெக்டில் எடுக்கப்பட்டிருப்பதால் அது சிறப்பாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. விஷுவலில் அந்த அவுட்புட்டும் நன்றாக இருக்கிறது

ஒரு காவலதிகாரி இப்படியெல்லாம் அசால்டாக இருப்பாரா? என்ற கேள்வி நமக்கு எழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சில இடங்களில் அந்தக் கேரக்டர் டம்மி செய்யப்பட்டிருப்பதை உணர முடிந்தது. அது ஒரு சிறந்த ஐடியாவாக க்ளைமாக்ஸில் வொர்க்கவுட் ஆகியுள்ளது. ஹீரோ கேரக்டருக்கு ஹைப் வரும் இடங்கள் படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரைட்டிங் ஆக இயக்குநர் அரவிந்த் ராஜ் நிறைய மெனக்கெட்டிருப்பது டீடைலிங் வொர்க்கில் தெரிகிறது

கடைசி 20 நிமிடங்கள் சீறிப்பாயும் படத்தை முழுவதுமாக சீற வைத்திருக்கலாம். தேர்ந்த நடிப்பு, சிறந்த மேக்கிங் அமைந்தது படத்திற்கு ப்ளஸ். சமரசம் மிகுந்த திரைக்கதை என்றாலும் பரம்பொருள் தரும் சில நல்ல அனுபவங்கள் ரசிக்க வைக்கிறது என்பது அந்தப் பரம்பொருள் மேல் சத்தியம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்