நிறைவான கலையம்சத்தோடு உருமாறியிருக்க வேண்டிய பன்னிகுட்டி…என்னென்ன பிரச்சனைகளால் தடம் மாறியது?
நாயகன்கள் கருணாகரன் யோகிபாபு. இருவரின் நல் வாழ்க்கைக்கும் ஒரு பன்னிகுட்டி தீர்வாக இருக்கிறது. யோகிபாபுவிற்கு பன்னிகுட்டியை காப்பாற்றினால் தான் வாழ்வு. கருணாகரனுக்கு பன்னிகுட்டி மீது வண்டியை விட்டு ஏற்றினால் தான் தீர்வு. இந்த பன்னிகுட்டி ஆட்டத்தில் யார் வென்றார்கள் என்பதே படத்தின் கதை
கருணாகரன் மிக இயல்பாக நடித்து ஈர்க்கிறார். யோகிபாபு நடிப்பும் காமெடியும் படத்திற்கு கூடுதல் பலம். ராமர், தங்கதுரை, சிங்கம்புலி, லியோனி ஆகியோரும் முடிந்தளவிற்கு நல்ல நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார்கள்.
படத்தில் கேயின் பின்னணி இசை ஓரளவு ஈர்க்கிறது. பாடல்கள் வசீகரிக்கிறது. ஒளிப்பதிவாளர் வேலை துல்லியம்
இத்தூனுண்டு கதையில் எக்கச்சக்க சுவாரஸ்யத்தை சேர்த்திருக்க வாய்ப்பிருந்தும் இயக்குநர் அனுசரண் கோட்டை விட்டுள்ளார். கதாப்பாத்திரங்களோடு நம்மை இணைத்துக் கொள்ள முடியாத தருணங்கள் படத்தில் ஏராளம். அதைச் சரி செய்திருந்தால் பன்னிகுட்டி சிங்ககுட்டியாக கர்ஜனை செய்திருக்கும்
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்