ஆழமற்ற கதையை கூட, அர்த்தமுள்ள திரைக்கதையால் அழகாக்க முடியும் என்பதற்கு, மலையாள கரையோரத்தின் மற்றொரு சாட்சி இந்த பணி
திருச்சூர் தாதா ஜோஜு ஜார்ஜ். அவருக்கு எதிராக இரு வில்லன்கள். அந்த இரு வில்லன்கள் ஜோஜு ஜார்ஜின் மனைவியை பாலியல் ரீதியாகச் சீண்டுகிறார்கள். அதனால் அவர்களை பழிவாங்குகிறார் ஜோஜு. இவ்வளவு தான் கதை. இதை தரமான திரைக்கதையாக மாற்றியுள்ளார் இயக்குநர்
கதையின் நாயகன் ஜோஜு தானொரு நடிப்பு நாயகன் என மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார். மிரட்டலான நடிப்பு. அபிநயா உள்பட அத்தனை கேரக்டர்களுக்கும் நல்ல ரைட்டிங். அத்தனை கேரக்டர்களும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர்
இசையால் திரைமொழிக்கு எந்தப் பாதகமும் வரவில்லை. சிறப்பாக அமைந்துள்ளது இசை. ஒளிப்பதிவை கனகச்சிதமாக அமைத்துள்ளார் கேமராமேன்
படைப்பாற்றல் என்பது,
சிறிய கதையை வைத்து பெரிய அதிர்வை ஏற்படுத்துவது தான். அப்படியான படைப்பாற்றலை கையில் வைத்துள்ளார் இயக்குநர். அதனால் தான் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை தரமாக அமைந்துள்ளது
4/5
-வெண்பா தமிழ்