வித்தியாச ஹாரரில் பஞ்சராக்ஷ்ரம்
தமிழ்சினிமாவில் பல த்ரில்லர் படங்கள் தயாரிக்கப்பட்டு அவ்வப்பொழுது வெளியிடப்படுகின்றன. ஆனால், அவை வேறுபட்ட திரைப்படங்களாக இல்லாமல் ஒரே மாதிரியாக வழக்கமான திகில் படங்களாகவே இருக்கிறது. உண்மையில், ‘சூப்பர்நேச்சுரல்’ மற்றும் ‘ஹாரர்’ வகைக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் சிறந்த எடுத்துக்காட்டு படமாக ‘பஞ்சராக்ஷ்ரம்’ சூப்பர்நேச்சுரல் – சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் என்று இப்போதே படக்குழு கூறி வருகிறது. பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வைரமுத்து இயக்குகிறார். ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’, ‘சந்திரமௌலி’ மற்றும் ‘பொது நலம் கருதி’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகர் சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.