Tamil Movie Ads News and Videos Portal

பாம்பாட்டம் படத்தின் மல்லிகா ஷெராவத் போஸ்டர்!

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,மலையாளம் , கன்னடம், என ஐந்து மொழிகளில் 30 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கிறார் வி.பழனிவேல் “பாம்பாட்டம்“திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் V.C.வடிவுடையான்

நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் கதாநாயகனாக நடித்துவருகிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி நாகமதி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். இவரின்
லுக்கை படக்குழுவினர் தற்போது வெளியிட்டனர் இது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.