Tamil Movie Ads News and Videos Portal

மார்ச்சில் வெளியாகிறது பாகி3

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள படம் பாகி 3.

இப்படத்தில் டைகர் ஷெராஃப் ரோனி எனும் கதாபாத்திரத்திலும் , ரித்தேஷ் தேஷ்முக் விக்ரம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள் . விறுவிறுப்பான ,ஆக்சன் காட்சிகள் நிறைந்த பாகி 3 படத்தில் ஷரதா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .

 

இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது . தற்போது அடுத்த பாடலாக “டூ யூ லவ் மீ ” பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது . சிறப்பு தோற்றத்தில் திஷா பதானி நடனம் ஆடியுள்ளார் . இந்த பாடலுக்கான அவரது தோற்றம் வெளியாகியுள்ளது .

பாகி 3 வரும் மார்ச் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது .