படத் தயாரிப்பாளர்களுக்கு தணிக்கை அதிகாரி வேண்டுகோள்
சில காலமாகவே படங்கள் தொடர்பான விளம்பரங்கள் செய்தித்தாள்களில் இடம் பெறும் போது, தணிக்கை அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெற்றத் திரைப்படம் என்ற வாசகமும் சில விளம்பரங்களில் இடம் பெறுவதைக் காணலாம். இது தொடர்பாக சென்னை மண்டல தணிக்கை அதிகாரி லீலா மணிமேகலையிடம் கேட்ட போது, “நானோ பிற தணிக்கை அதிகாரிகளோ எந்தவொரு படத்தையும் பாராட்டுவதோ அல்லது விமர்ச்சிப்பதோ கிடையாது. அப்படி செய்வது முறையானதும் இல்லை. அப்படத்தின் இயக்குநரோ அல்லது தயாரிப்பாளரோ படம் எப்படி இருக்கிறது என்று கேட்கும் போது, சம்பிரதாயத்திற்காக நன்றாக இருக்கிறது என்று கூறுவோம். அதை சில தயாரிப்பாளர்கள் விளம்பரப்படுத்திவிடுகிறார்கள். இது போன்ற விளம்பரங்களில் ஈடுபட வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு என் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்..” என்று தெரிவித்தார்.