பச்சை விளக்கு என்ற டைட்டிலே நமக்கு கதை சொல்லி விடுகிறது. இது பாடமெடுக்கிற படமென்று. படத்தின் நாயகன் மாறன் சாலை விதிகள் மேல் தீவிர கவனம் செலுத்துபவர். ட்ராபிக் போலீஸ் இமான் அண்ணாச்சியோடு சேர்ந்து சாலை விதிகளை மதிக்கச் சொல்பவர். அவருக்கு ஒரு காதல் வருகிறது. அந்தக்காதலி வீட்டில் ஒரு பிரச்சனை வருகிறது. பிரச்சனையை ஹீரோ எப்படி சரி செய்கிறார் என்பது தான் படத்தின் கதை. இந்தப்படத்தின் ப்ளஸ்பாயிண்ட் படம் எடுத்துக்கொண்ட கதைக்களம் மட்டும் தான். மற்ற எல்லாமே விமர்சனத்திற்கு உட்பட்டது. அதனால் நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட படம் என்பதால் பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்ளுதல் நலம். டாக்டர் மாறன் ஹீரோவாக நடித்ததோடு, படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் பாக்கியராஜ் வந்திருந்தார். மாறன் பாக்கியராஜிடம் திரைக்கதை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு இனிவரும் காலங்களில் கெத்து காட்ட வேண்டும்.
சாலைகளில் விதி மீறிய பயணம் ஆபத்து என்ற ரெட் அலர்ட் கொடுக்கிறது இந்தப்பச்சை விளக்கு!