காதல் மூலமாக பெற்றோர்கள் தனித்து விடப்படலாமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது பானி பூரி வெப்தொடர். ஷாட் ப்ளீக்ஸில் காணக்கிடைக்கும் இந்த வெப்தொடரின் கதை?
காதல் என்பது வேறு, திருமணம் என்பது வேறு என்பதை உணர்த்துவது மிகவும் கடினம். அதனால் ஏழு நாட்கள் கணவன் மனைவி போல வாழ்ந்து நமக்கு செட் ஆகுமா என்பதை சோதித்துக் கொள்வோம் என காதலர்களான லிங்காவும் சாம்பிகாவும் முடிவெடுக்கிறார்கள். உடல் சார்ந்த தொடர்பு இல்லாமல் ஏனைய எல்லாவிதத்திலும் கணவன் மனைவியாக வாழும் இவர்கள் ஏழுநாட்களுக்குள் சில பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். அந்தப்பிரச்சனைகளில் இருந்து எப்படி மீண்டார்கள் என்பதே சீரிஸின் கதை!
காதலராக லிங்கா இயல்பான நடிப்பால் நம்மை கவர்கிறார். நாயகி சாம்பிகாவின் நடிப்பும் உறுத்தலில்லாத வகையில் அமைந்துள்ளது இளங்கோவன் குமரவேல் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார்
பின்னணி இசை ஒளிப்பதிவு என டெக்னிக்கல் டீம் யாவரும் ஆர்வத்தோடு உழைத்துள்ளனர். அந்த உழைப்பிற்கான பலன் ஓரளவு கிடைத்துள்ளது
இப்படியான கதையில் சொல்லப்படும் அறம் அவசியம் என்பதை உணர்ந்து திரைமொழியை அமைத்துள்ள இயக்குநர் பாலாஜிவேணுகோபால் இன்னும் கதை சொல்லலின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். பானிபூரி என்பது நொடியும் தாமதிக்காமல் சுவைக்க வேண்டிய அம்சமல்லவா? But இந்த டைட்டிலில் இருக்கும் பானிபூரிக்கும் நாம் சாப்பிடும் பானிபூரிக்கும் சம்பந்தமில்லை என்பது அடிஷ்னல் செய்தி
பானிபூரி நோக்கத்தில் நிறையை வைத்துள்ளது. ஆக்கத்தில் நிறைவை எட்டவில்லை
2.5./5
-மு.ஜெகன் கவிராஜ்