‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய நடிகை ஓவியாவை ஆரம்பத்தில் தமிழ் ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டப் பின்னர் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அவர் பிரபலமானார்.
‘ஓவியா ஆர்மி” ஆரம்பிக்கும் அளவிற்கு அவருக்கு பட்டி தொட்டி எல்லாம் ஃபேன்ஸ் கூட்டம் முளைத்தது. அப்படிப்பட்ட ரசிகர்கள் கூட்டத்தின் தற்போதைய ஒற்றைக் கேள்வி ஓவியாவுக்கு என்னாயிற்று என்பது தான். ஏனென்றால் சமீபத்தில் ஜீ தமிழ் விருது விழாவில் தொகுப்பாளராக கலந்து கொண்ட ஓவியா, தன் துள்ளளான ஸ்டைலுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் தான் ஓவியாவின் ரசிகர்கள் பதறிப் போய் நல விசாரிப்புகளை தொடங்கிவிட்டனர். ஆனால் பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை. குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டாராம். அதனால் ஓவியா ஆர்மி ”டோண்ட் வொர்ரி.. பி கூல்”