மொத்தம் பத்துக்கதைகள். அத்தனையும் முத்துக்கள்
தனக்கு மிகவும் பிடித்தவரிடம் தனக்கு மிகவும் பிடித்த ஒன்றை அடையாளம் காட்ட நினைக்கிறோம். நாம் காட்டச் செல்லும் அந்த அடையாளம் அழிக்கப்பட்டிருந்தால் எவ்வளவு வலிக்கும்! அந்த வலியை அடையாளம் என்ற கதையில் மிகையின்றி வகைப்படுத்திருந்தார் தோப்பில் முகமது மீரான்.
7 ஆவது கதையான தங்கவயல் என்ற கதை தந்தைக்கு மகன் துரோகம் செய்ததைப் பற்றியது. மனிதனால் எளிதில் ஜீரணிக்க முடியாத ஒன்று துரோகம். துணை நிற்க வேண்டியவர்கள் துரோகிக்கும் போது வாழ்க்கை சூன்யமாகத் தெரியும். துரோகத்தை நெஞ்சில் வாங்கிவிட்ட பின் மனிதனின் இயல்பில் தடுமாற்றம் வரும். தன்னம்பிக்கை இன்மையும், இயலாமையும் ஒருசேர வறுத்தும். வாங்கியக் கடனை திருப்பித் தர முடியும். வாங்கியத் துரோகத்தை?!
துரோகத்தின் நிழலில் வசித்த அனுபவம் உண்டு என்பதாலோ என்னவோ தங்கவயல் கதை ரொம்பவே மனதை ரணமாக்கிச் சென்றது..
தலைப்பாகை கட்டிய ஒரு கூலித்தொழிலாளிப் பெண்ணின் பாவக்கதை ஒன்றை வாசித்தால், பாவம் செய்யும் எண்ணம் பக்கத்திலே வராது
எல்லாமே நெஞ்சைப் புழிந்தெடுத்த கதைகள் தான். வாசித்தால் பிறரை வஞ்சிக்கும் எண்ணம் அறவே வராது என்று நம்பிக்கையோடுச் சொல்லலாம். அது மூட நம்பிக்கை என்று உள் மனதுச் சொன்னாலும் சொல்லிட்டுப் போகட்டும்