தேசிய விருது பெற்ற நடிகரான ஆயுஸ்மான் குரானா நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம் சுப் மங்கள் ஸ்யாதா. இப்படம் ஓரினச் சேர்க்கையாளர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. இதில் ஆயுஸ்மான் குரானா மற்றும் ஜிதேந்திரக்குமார் இருவரும் முத்தமிடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அவை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, இப்படத்தினை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர், “ஆயூஸ்மான் குரானா இப்படத்தில் நடித்ததன் மூலம் புதிய பாதையினை திறந்துள்ளார். இயக்குநர் ஹிதேஷ் கேவல்யா இப்படத்தை மிக திறமையாக கையாண்டுள்ளார். இப்படத்தை எடுத்தவர்கள் பெருமைப்பட வேண்டும். மூடி வைத்த கதைகளை பரிசோதனை செய்ய கதாசிரியர்கள் தயாராகவே உள்ளனர். இப்படம் சிறந்த கலைப்படைப்பு” என்று கூறியுள்ளார்.