Tamil Movie Ads News and Videos Portal

ஆன்லைன் தியேட்டரில் ஒன்பது குழி சம்பத்

80-20 பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருநாவுக்கரசுவின் தயாரிப்பில், ஜா.ரகுபதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்பது குழி சம்பத். வரும் ஜூலை 24-ஆம் தேதி ஆன்லைன் தியேட்டரில் இப்படம் வெளியாக இருக்கிறது.

ஆன்லைன் தியேட்டரா? அப்படின்னா என்ன? அதில் என்ன புதுமை? ஒன்பது குழி சம்பத் படத்தின் ஒரு வரி கதை உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு….

ஒன்பது குழி சம்பத் படத்தை ஆன்லைன் தியேட்டரில் வெளியிடுவதாகச் சொல்கிறீர்களே? அது என்ன ஆன்லைன் தியேட்டர்?

தியேட்டரில் படம் பார்க்கும் சுகமே தனி சுகம்தான். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தியேட்டரில் படம் பார்ப்பது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, இணையத்தில் பார்க்கும் காலம் வந்துவிட்டது. Over The Top telecast எனப்படும் OTT முறையில் இணையத்தில் படங்கள் வெளியாகின்றன.

உதாரணத்திற்கு, அமேசான் பிரைம், நெட் பிளிக்ஸ் போன்றவை 5000 படங்களை தனது பக்கத்தில் வலையேற்றி வைத்திருக்குகிறது. அதற்கு மாதமாதம் சந்தா கட்ட வேண்டியது இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த படங்களும் இருக்கும். பிடிக்காத படங்களும் இருக்கும். இது ஒரு வகையான ஆன்லைன் ஸ்ட்ரீம் சினிமா பக்கம்.

எங்கள் படத்தை நாங்கள் Pay Per View (PPV) என்ற கான்செப்டில் வெளியிட இருக்கிறோம். அதாவது, உங்களுக்கு பிடித்தப் படத்திற்கான டிக்கெட் கட்டணத்தை மட்டும் செலுத்தி, அப்படத்தை மட்டும் பார்க்கலாம். எளிமையாக சொல்லுவதென்றால், எப்படி ஒரு தியேட்டருக்கு நேரில் சென்று, டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறோமோ, அதே போல, ஆன்லைனில் அப்படம் ரிலீஸ் ஆகும் தேதியில், டிக்கெட் எடுத்து, வீட்டில் இருந்தபடியே குடும்பத்தோடு அமர்ந்து படம் பார்க்கலாம். அதனால்தான் இதை ஆன்லைன் தியேட்டர் என்கிறேன்” என்றார்

கிராமத்தில் கோலி விளையாடியபடி திரிந்துகொண்டிருக்கும் போக்கிரி இளைஞனின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதனால் அவன் வாழ்வு எப்படி திசைமாறிப்போகிறது என்பதுதான் இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படம் இது. தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாக இன்று கிராமங்களும் நகரங்களைப் போலவே இருக்கின்றன. எங்கள் படத்தில் தொழில்நுட்ப வசதி இல்லாத கிராமத்தைப் பார்ப்பீர்கள். திருச்சியில் உள்ள கிராமத்தை கேமரா கண்களில் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம்” என்று படத்தைப் பற்றி கூடுதலான தகவல்களையும் சொன்னார் தயாரிப்பாளர்