ஆதுரமா முத்தம் கொடுக்கச் சொன்னா ஆளையே காலி பண்ற அளவுக்கு உதட்டு வழியா கொலை.முயற்சி செய்திருக்கிறார் ஹீரோ..பதட்டப்பட வேண்டாம் மேட்டர் என்னன்னா…
சாட் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள
திரைப்படம் உற்றான். இப்படத்தில் ஹீரோ ரோஷன் ஹீரோவாகவும்
ஹரிரோஷினி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஓ.ராஜா கஜினி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் சூட்டிங்ல தான் மேற்சொன்ன மேட்டர் அரங்கேறியுள்ளது. அதாகப்பட்டது ரசிக ஜனங்களே…இயக்குநர் ஹீரோவை ஹீரோயினுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். ஹீரோவும் நல்லப்பிள்ளையாக முத்தம் கொடுக்க வாய்மீது வாய் வைத்துள்ளார். இதுவரை கரெக்ட். ஆனா வச்ச வாயை எடுக்கணுமா இல்லையா?
ஹீரோ எடுக்கவே இல்லையாம். ஹீரோயின் இதனால் படு அப்செட்டாம். பிறகு இயக்குநர் தான் சமாளித்துள்ளார்.
படம் நாளைண்ணிக்கு வருது. முத்த சீனுக்காகவே முதல் ஆளா போகணும் பாஸ்