“இங்கேரு டூட் நாம ரசிக்குற, ரசிக்காத, பார்த்த, பார்க்காத படங்கள் பற்றி எவ்வளவோ சமாச்சாரம்ஸ் இருக்கு ” என்று தோளில் கைபோட்டுச் சொல்லும் கட்டுரைகள் நூலெங்கும்
தமிழ் சினிமாவில் வில்லன்கள் பற்றிய கட்டுரைகளில் துவங்கி, தமிழ்சினிமாவில் அப்பாக்கள் கட்டுரை வரை அனைத்துமே வொர்த்து
அந்திமழையில் தொடராக வந்த கட்டுரைகளை அழகாக தொகுத்திருக்கிறார்கள். Karundhel Rajesh பிரதர் எழுதிய இந்நூலை சினிமாவில் இயங்கும் அனைவரும் வாசிக்கலாம். தகவல்கள் எல்லாமே ஆகத்தரம்..
பாக்கியராஜ் படமான சுவர் இல்லாத சித்திரங்களில் கல்லாப்பட்டி சிங்காரத்தின் அப்பா கேரக்டர் எங்கள் ஊரைச் சேர்ந்த வேல்சாமி பெரியப்பாவை நினைவூட்டியது.. அந்தக் கேரக்டர் பற்றிய குறிப்பை எழுத நிச்சயமாக சினிமாவை நுண்ணியமாக கவனிக்கும் கண்ணியம் இருந்தாலே சாத்தியம்.
அந்திமழை அசோகர் சாரின் முயற்சியும் இந்த நூல் வெளிவர காரணம் என்பது கூடுதல் மகிழ்ச்சி 🙏