Tamil Movie Ads News and Videos Portal

ஆன்லைனில் வெளியாகாது! முடக்கப்பட்ட ஹீரோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆயினும் இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை தயாரிப்பாளர் முன்பே விற்றிருந்தார். இந்நிலையில் அப்படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். தற்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் உதவி இயக்குநருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதனால் அப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கி இருந்த அமேசான் ஹீரோ படத்தை வெளியிடாது என்றே தெரிகிறது. மேலும் அப்படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கி இருந்த சன்டிவியும் இப்படத்தை ஒளிப்பரப்ப முடியாது என்றே தெரிகிறது. என்னடா இது ஹீரோவுக்கு நேர்ந்த கொடுமை