Tamil Movie Ads News and Videos Portal

நாடோடிகள்-2 சசிகுமார் சமுத்திரக்கனிக்கு நன்றி சொல்லும் நடிகர்

நாடோடிகள்2 படத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்றுள்ள நடிகர் இசக்கி பரத் மீடியாவிற்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்.

” அன்புள்ள ஊடக நண்பர்களுக்கு,

எனது பணிவான வணக்கம்.

இசக்கி குடும்ப வாரிசான நான், தமிழ் திரையுலகில் ‘கோலி சோடா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானேன். அப்படத்தில் எனது பங்களிப்பு குறித்த உங்களது விமர்சனங்கள் ஒரு கலைஞனாக எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் ஊக்குவிப்பதாகவும், என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாகவும் அமைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில், ‘நாடோடிகள் – 2′ திரைப்படத்தில் நடிகர் – இயக்குனர் சசிக்குமாருடன் இணைந்து ஒரு “ஷங்கர்”முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

இப்படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் சமுத்திரகனி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன். இப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், கலை இயக்குனர் ஜாக்கி, படத் தொகுப்பாளர் AL ரமேஷ், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்”

உங்களது மேலான கருத்துகளையும் விமர்சனங்களையும் எதிர்நோக்கும்

உங்கள் அன்பிற்கினிய

இசக்கி’ பரத்