நேற்று நடைபெற்ற தமிழரசன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது,
“பெயரிலே பொன்னை வைத்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், விஜய் ஆண்ட்னி, சிவா அனைவருக்கும் வணக்கம். சிவா நல்ல படம் எடுக்கணும். என்று நினைப்பவர். விஜய் ஆண்டனி ஒரு ஆச்சர்யமான முகம். ரொம்ப சாதாரணமா இருப்பார். ஆனால் படத்தில் வேறமாதிரி இருக்கிறார். நல்ல இசை அமைப்பாளர் இப்போது நல்ல நடிகர். தமிழரசன் என்ற பெயர் ரொம்ப நல்லாருக்கு. இளையராஜாவை மிஞ்சிவதற்கு இனி
ஒரு இசை அமைப்பாளர் பிறந்து வந்தாலும் முடியாது. படத்தை ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தாலும் அந்தப்படத்திற்கு உயிர் கொடுத்து விடுவார் இளையராஜா..பேசாத படத்தை பேச வைத்தவர் இளையராஜா. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் இசைக்கு ஈடு இணையில்லை. இந்த இயக்குநரை சிவா தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயம் பாபு யோகேஸ்வரன் நல்ல இயக்குநராகத் தான் இருப்பான். இனி வரும் இளைஞர்கள் கொஞ்சம் வயலன்ஸ் இல்லாமல் படமெடுங்கள். இது நல்லபடம். சிவா மனசிற்க்ய் இந்தப்படம் பெரிய வெற்றிய அடையும்” என்றார்