நல்ல கதையம்சம் கொண்ட ஃபீல் குட் படங்கள் எப்போதும் சினிமா பார்வையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முக்கியமான கதையாக ‘நித்தம் ஒரு வானம்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தினை Ra. கார்த்திக் இயக்க, ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து தயாரித்து இருக்கிறது. படத்தில் அசோக்செல்வன், ரித்துவர்மா மற்றும் அபர்ணா பாலமுரளி & ஷிவாத்மிகா ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வாழ்க்கையின் பயணத்தை மிகவும் பாசிட்டிவான முறையில் கையாண்டுள்ள இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என இயக்குநர் Ra. கார்த்திக் நம்புகிறார். படம் பார்த்து முடித்து திரையரங்குகளில் இருந்து பார்வையாளர்கள் வெளியேறும் போது நிச்சயம் கதை குறித்து பாசிட்டிவாக உணர்வார்கள். வெவ்வேறு காலக்கட்டம் மற்றும் சென்னை, சண்டிகர், மணலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா என வித்தியாசமான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
#Nithamoruvaanam #நித்தம் ஒரு வானம்