”நிசப்தம்” அதிர்வைக் கொடுக்கும் அனுஷ்கா பட டிரைலர்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘நிசப்தம்’. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பாகமதி திரைப்படத்திற்குப் பின்னர் அவர் நடித்திருக்கும் நிசப்தம் திரைப்படத்தை ஹேமந்த் மதுர்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே போன்றோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. 1.14 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த டீஸர் திகில் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக இருப்பதால் படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.