Tamil Movie Ads News and Videos Portal

நிலம்-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் கலை நேர்த்தியை எந்த விமர்கசரும் பார்க்காத கோணத்தில் பார்க்கும் பவாவின் கட்டுரை சினிமாக்காதலர்கள் தவறவிடக்கூடாதவை

தன் தந்தை விட்ட நிலத்தை பவா குடும்பம் தொட்ட கதை பெரு உழைப்பின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

கோவில்பட்டி சென்று எழுத்தாளர் கோணங்கியை பார்க்கச் சென்ற பவா செல்லத்துரையும் அவரது மனைவி ஷைலஜாவும் வீட்டில் அவர் இல்லை என்பதால், “சரி வந்ததிற்காக சில புத்தகங்களை எடுத்துச் செல்லலாம்” என்ற முடிவெடுத்து கோணங்கி வீட்டின் அலமாரிகளில் உள்ள சில நூல்களை எடுத்து வந்துவிட்டனர். இதை அறிந்த கோணங்கி, “புத்தகம் இல்லாத என் அலமாரிகள் என்னை தற்கொலைக்கு அழைக்கிறது” என்று தொலைபேசுகிறார். உடனே பவா எல்லாப்புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு செல்ல ஆயத்தமாகிறார். அதன்பின் மனம் மாறும் கோணங்கி, “சரி புத்தகங்கள் அங்கேயே இருக்கட்டும்” என்கிறார். கோணங்கி அவர்களின் விசித்திர மனப்போக்கை முன் வைக்கும் கட்டுரையில் கோணங்கியின் பெரும் பேரன்பை தாங்குவது கடினம் என்றும் எழுதுகிறார் பவா. எத்தனை மன மாறுபாடுகள் இருப்பினும் அன்பில் நிலைகொள்ளும் பெரும் படைப்பாளி அல்லவா கோணங்கி

இருளர்களையும், நரிக்குறவர்களையும், எளிய விளிம்புநிலை மனிதர்களையும் மட்டுமே ஏன் எழுதி வருகிறீர்கள்? என்ற கேள்விக்கு பவா செல்லத்துரை அவர்கள் தரும் பதில் வாசிக்க வேண்டிய ஒன்று.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள கலையழகுடன் கூடிய தன் வீட்டைப்பற்றி இந்தக்கட்டுரையில் எழுதியுள்ள பவாவின் கைகளினால் அந்த வீட்டில் வைத்து இந்த நூலைப் பெற்றதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. இதனை வெகு இயல்பாக சாத்தியப்படுத்திய அண்ணன் மணி ஜி அவர்களுக்கு நன்றி