ரேணிகுண்டா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.பன்னிர்செல்வம். ’18 வயசு’ மற்றும் விஜயசேதுபதி நடித்த ‘கருப்பன்’ ஆகிய படங்களையும் இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும்
‘நான்தான் சிவா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது :
“ஒரு இளைஞன், அவனது வாழ்க்கையில் இருவரை சந்திக்கிறான். அந்த இருவரும் அவனின் வாழ்வை வெவ்வேறு வகையில் சிதறடிக்கிறார்கள். அதிலிருந்து அந்த இளைஞன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே இப்படத்தின் கதை. இதை காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் கூறியிருக்கிறோம். இதன் படபிடிப்பு கும்பகோணம், திருச்சி பகுதிகளில் நடந்தது. படபிடிப்பு முடிவடைந்து அடுத்தக் கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இன்று இப்படத்தின் பாடல்கள் சோனி ஆன்லைனில் வெளியாகிறது” என்றார்
இப்படத்தில் கதாநாயகனாக புதுமுகம் வினோத் நடிக்க, கதாநாயகியாக ‘உதயம் NH4’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான அர்ஷிதா ஷெட்டி நடிக்கிறார்.