Tamil Movie Ads News and Videos Portal

அடுத்த அறிவிப்பு “ஏப்ரல் 14-ல்”

திரையுலக பிரமுகர்கள் யாருமே மத்திய மாநில அரசுகளுக்கோ அல்லது பெப்ஸி மற்றும் நடிகர் சங்கம் போன்ற அவர்களோடு தொடர்புடைய அமைப்புகளுக்கோ பெரிதாக உதவிகள் ஏதும் செய்யாமல் பெயருக்கு செய்கிறார்கள் என்கின்ற முணுமுணுப்பு கேட்டபடி இருக்கிறது. இந்த நேரத்தில் நடன இயக்குநர், நடிகர் மற்றும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அறிவித்த 3 கோடி அறிவிப்பு பலரின் புருவத்தையும் உயர்த்தி இருக்கிறது. மேலும் வரும் ஏப்ரல் 14ம் தேதி அன்றும் உதவி தொடர்பான அடுத்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

அது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது, “நான் செய்த உதவிகள் போதாது என்று தோன்றுகிறது. இன்னும் பல பொதுமக்களும், ரசிகர்களும், உதவி இயக்குநர்கள் தங்களுக்கும் ஏதாவது உதவி செய்யுமாறு என்னைக் கேட்டு வருகிறார்கள். பலர் வீடியோ பதிவையும் அனுப்பு உதவிகேட்கின்றனர். அதனைப் பார்க்கும் போது என் உயிரே போகிறது. அவர்களுக்கு என்ன உதவிகள் வழங்கலாம் என்று என் ஆடிட்டருடன் இணைந்து கலந்தாசித்து அவர்களுக்கான உதவிகளை வரும் ஏப்ரல் 14 புத்தாண்டு அன்று அறிவிப்பேன். மேலும் அரசு தன்னார்வத் தொண்டர்கள் பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை உத்தரவை தளர்த்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றும் அவர் கூறியுள்ளார்.