Tamil Movie Ads News and Videos Portal

மணிரத்னம் பட்டறையில் இருந்தவரின் புதியபடம்


இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ராம் மகேந்திரா. இவர் இயக்கிய “மனம்” குறும்படம் தற்போது வெளியாகி எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கோலிவுட்டின் இயக்குநர்கள்… நடிகர், நடிகைகள் இப்படத்தை தங்கள் பாராட்டால் நிரப்பி வருகின்றனர்.

இந்த மகிழ்வான தருணத்தில் இந்தியில் தயாராகும் படத்தை தொடங்கிவிட்டார்கள். முற்றிலும் இந்தி நட்சத்திரங்களை வைத்துத் தயாராகும் இப்படத்திற்கான பூஜையும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அறிமுகமும் நேற்று நடைபெற்றது. மாயன் சினிமாஸ், மற்றும் மானசரோவர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் Covid19 தடைக்காலம் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. எம். சிவக்குமார், உதய்குமார் ஸ்ரீதரன், காமாட்சி ஹரிகரன், ராம் மகேந்திரா, மற்றும் A. ஜான் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்ய, இசையமைக்கிறார் சந்தோஷ். கலையை சரவணன் வடிவமைக்க தயாரிப்பு மேற்பார்வை செய்கிறார் மாயா.

முழுக்க முழுக்க இந்தியில் தயாராகிறது படம்.

படம் பற்றி இயக்குநர் ராம் மகேந்திரா கூறியதாவது, மனம் படத்திற்கு கிடைத்த ஆகச்சிறந்த ஆதரவின் பலம்கொண்டு இன்று அடுத்த படைப்புக்கு நகர்ந்திருக்கிறோம். படப்பிடிப்பிற்கு தயார் நிலையில் இருக்கிறோம். இப்படம் ஒரு கூட்டு முயற்சி. கூடிய விரைவில் எங்களுடைய ஹிந்திப் படத்தின் முதல் பார்வையோடு உங்களை சந்திக்க வருகிறோம். நன்றி என்றார்.